|
|
comments (0)
|
Aouther is not Availalble if you found tell me.
முஸ்லிம் தேடும் மனைவி
பெண்ணைக் குறித்தும் திருமணத்தைக் குறித்தும் இஸ்லாம் போதிக்கும் உயர்வான கண்ணோட்டத்தின்படி செயல்பட விரும்பும் ஒரு முஸ்லிமை, வெறும் வெளி அலங்காரங்களை மட்டுமே கொண்ட இந்தக் கால இளம் பெண்கள் எவரும் கவர்ந்திட முடியாது. மாறாக, முழுமையான மார்க்கப்பற்றுள்ள பெண்கள்தான் அந்த முஸ்லிமை ஈர்க்க முடியும். ஆகவே, தமது வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் தம் மண வாழ்வை நிம்மதியானதாகவும், மகிழ்ச்சி கரமானதாகவும் ஆக்கக்கூடிய இஸ்லாமிய நற்பண்புகள் மிக்க பெண்ணையே அவர் தேர்ந்தெடுப்பார் அதில் நிதானத்தையும் கடைப்பிடிப்பார். கொள்கையற்று வீணான இளைஞர்களைப் போன்று வெறும் அழகையும், அலங்காரத்தையும், கவர்ச்சி யையும் மட்டுமே அவர் நோக்கமாகக் கொள்ளமாட்டார். அதற்கெல்லாம் மேலாக உறுதிமிக்க மார்க்கப்பற்று, சிறந்த அறிவு, அழகிய பண்பாடுகளை உடைய பெண்ணைத் தான் முஸ்லிம் தேடுவார். மேலும், இது விஷயத்தில் நபி அவர்களின் வழிகாட்டுதலை கருத்தில் கொள்வார்.
நபி அவர்கள் கூறினார்கள்: "நான்கு (நோக்கங்களு)க்காக ஒரு பெண் மணமுடிக் கப்படுகிறாள். அவளது செல்வத்துக்காக, அவளது குடும்பப் பாரம்பரியத்துக்காக, அவளது அழகுக்காக, அவளது மார்க்கத்திற்காக. நீ மார்க்கமுடையவளையே தேடிப் பெற்றுக் கொள்! உன் இருகரங்களும் மண்ணாகட்டும்!'' (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
(வாழ்த்துகிற பொழுது ‘உன் இருகரங்கள் மண்ணாகட்டும், உன் நெற்றி மண்ணாகட்டும்' என்றெல்லாம் நபி அவர்கள் கூறுவார்கள். அதற்கு அதிகமதிகம் அல்லாஹ்விற்குச் சிரம் பணி(ந்து ஸஜ்தா செய்)யட்டும் என்பது பொருளாகும்.)
மார்க்கத்தைப் பேணக்கூடிய பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு நபி அவர்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு உபதேசித்தது, அழகான பெண்ணைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்ற கருத்தில் அல்ல. ஏனென்றால், நபி அவர்கள் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்த்துக் கொள்வதும் விரும்பத்தக்கதே என்று கூறியிருக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தமது மனதுக்கு மகிழ்ச்சியளிக்காத, கண்களுக்குக் குளிர்ச்சி அளிக்காத பெண்ணை மணந்து சிரமத்தில் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்துக்கொள்ளவும் நபி அவர்கள் கட்டளையிட்டார்கள்.
முகீரா இப்னு ஷஃஅபா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி அவர்களின் காலத்தில், நான் ஒரு பெண்ணை மணம் முடிக்கப் பேசினேன். நபி அவர்கள் ‘அந்தப் பெண்ணைப் பார்த்தீரா?' என்று கேட்டார்கள். நான் ‘இல்லை' என்றேன். அதற்கு நபி அவர்கள் அவளைப் பார்த்துக் கொள்! அது உங்களிடையே நேசத்தை ஏற்படுத்துவதற்கு மிக ஏற்றமாக இருக்கும்'' என்று கூறினார்கள். (ஸுனனுன் நஸயி)
அன்சாரிப் பெண்ணை மணந்து கொள்ள இருந்த ஒருவர் நபி அவர்களிடம் வந்தார். நபி அவர்கள், அவரிடம் ‘அப்பெண்ணைப் பார்த்தாயா?' என்று கேட்டார்கள். அவர் ‘இல்லை' என்றார். ‘அப்பெண்ணைப் பார்த்துக் கொள்!' என அவருக்கு நபி கட்டளையிட்டார்கள். (ஸுனனுன் நஸயி)
ஒரு நல்ல பெண்ணிடம், விரும்பத்தகுந்த ஆன்மிகப் பண்புகளை ஓர் ஆண் எதிர்பார்ப்பது போன்றே அவள் அழகானவளாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் இயற்கையான ஒன்றுதான். இதை நபி அவர்கள் பல ஹதீஸ்களில் உறுதிப்படுத்தியுள்ளார்கள். இந்த இரண்டில் ஒன்று இருப்பதால் மற்றொன்று தேவையில்லை என்றாக முடியாது.
இதனால்தான் நபி அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களுக்குக் கூறினார்கள்: "மனிதன் பொக்கிஷமாகக் கருத வேண்டியதில் மிகச் சிறந்ததை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (அதுதான்) நல்ல பெண். கணவர் அவளைப் பார்த்தால், அவள் அவரை மகிழ்விப்பாள். அவர் கட்டளையிட்டால் ஏற்று நடப்பாள். அவர் அவளைவிட்டும் சென்றுவிட்டால் அவரைப் பாதுகாத்துக் கொள்வாள்.'' (முஸ்தத்ரகுல் ஹாகிம்)
(இந்த இடத்தில், மனைவி தனது கற்பைப் பாதுகாப்பதையே கணவரைப் பாதுகாப்பதென்று நபி அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.)
அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி அவர்களிடம் 'பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?' என கேட்கப்பட்டது. அதற்கு நபி அவர்கள், 'கணவர் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். அவர் ஏவினால் கட்டுப்படுவாள். அவரது பொருளிலும் அவளது ஆன்மாவிலும் அவர் வெறுக்கும் காரியங்களிலும் அவருக்கு மாறு செய்ய மாட்டாள்' என்று கூறினார்கள். (முஸ்னது அஹ்மது)
கணவருக்கு நிம்மதியையும் மகிழ்ச்சி யையும் நற்பாக்கியத்தையும் வழங்க ஆற்றல் பெற்ற மனைவியின் தனித்தன்மையைப் பற்றி நபியவர்களின் உயர்ந்த கண்ணோட்டமாகும் இது. இத்தகைய பெண்ணே இல்லறத்தில் திருப்தி, அமைதி, மன மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தை வழங்கவும் ஆற்றல் பெற்றவள். அது மட்டுமின்றி பல தலைமுறைகளுக்குச் சிறந்த பயிற்சியாளராகவும் வீரர்களை உருவாக்குபவராகவும் மேதைகளை உற்பத்தி செய்பவராகவும் விளங்குவாள்.
உடல், உணர்வு, ஆன்மா, அறிவின் தேட்டங்களுக்கு ஏற்ப உறுதிமிக்க, சமநிலை பெற்ற அடிப்படையின் மீதே திருமணம் என்ற மாளிகை நிர்மாணிக்கப்பட வேண்டுமென நபி அவர்கள் ஆசைப்பட்டார்கள். அப்போதுதான் திருமண உறவு பலமாக அமைந்து வெறுப்புணர்வும் மனக்கசப்பும் அதை அசைத்து விட முடியாமல் இருக்கும். ஆகவே, எல்லா நிலையிலும் அல்லாஹ்வின் மார்க்கத்தையே பின்பற்றும் உண்மை முஸ்லிம் தீயகுணமுள்ள அழகிய பெண்ணின் வலையில் சிக்கிவிடமாட்டார். மாறாக, அவளைவிட்டும் தாமும் விலகி மக்களையும் எச்சரிப்பார்.
|
|
comments (0)
|
முஸ்லிம் கிராமங்களில் காணப்படும் சமூகப் பிரச்சினைகளின் தீர்வுகள் தொடர்பான ஒரு உளவியல் கண்ணோட்டம்
27.10.2010
BY :
மருதமுனை ஏ.ஆர்.அப்துல் ஹமீட்
உளவளத்துணையாளர்
'நன்மையான காரியங்களைச் (செய்யுமாறு மனிதர்களை) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாவை விசுவாசிக்கின்ற நீங்கள்தாம், மனிதர்களில் தோன்றிய சமுதாயத்தார்களிலெல்லாம் மிக்க மேலானவர்கள்.' (03:110)
எவ்வளவு பொருள் பொதிந்த அல் - குர்ஆன் வாக்கியம் இது!. நல்ல காரியங்கவை எடுத்தியம்பி, கெட்ட காரியங்களைத் தடுக்கும், தனிமனித - குழுசார்ந்த - சமூக ரீதியான செயற்பாட்டின் மொத்த விளக்கத்தையே இது வெளிப்படுத்துகின்றது. குற்றங்கள் நிகழாத சமூக அமைப்பு எந்த சமுதாயத்திலும் இல்லாமலிருக்க நியாயமேயில்லை. அந்த வகையில் பாவகாரியங்களைப் புரிபவர்களும், அவற்றைத் தடுப்பவர்களும் ஒரே சமூக சூழலிலேயே காணப்படுகின்றனர். இங்கே இறைவிசுவாசமுள்ள தடுப்பாளர்களே மேலானவர்கள். ஒரு சமூகத்தின் சமய-கலாச்சார விழுமியங்கள் வீழ்ச்சியடையும்போது அங்கே முரண்பாடுகள் முளைப்பதும் - தளைப்பதும் - தடுக்கப்படுவதும் சாத்தியம். இதற்கு சில முஸ்லிம் கிராமங்களும் விதி - விலக்கில்லை.
சமூகம் என்பது தனிநபர், குழுக்கள் ஆகிய அம்சங்கள் கொண்ட ஒரு சிக்கலான வலைப் பின்னல்! குடும்பங்கள், பாடசாலைகள், சமய பாடசாலைகள், மார்க்க அறிஞர்கள், மதப்பிரிவுகள், வழிபாட்டிடங்கள், சமூக சேவை நிறுவனங்கள், அரசியல் கட்சிக் கிளைகள் போன்ற பலமான குழுக்கள் இந்த வலைப் பின்னலில் முக்கிய ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த வலைப்பின்னலில் ஏற்படும் அசைவுகளும் - அதிர்வுகளும், சமூகத்தின் எல்லா மூலை - முடுக்குகளிலும், நேராகவும் - எதிராகவும் எதிரோலிக்கின்றன. சமூகம் தொடர்பான உள்ளுர் - வெளியூர் கணிப்பீடுகளும், மதிப்பீடுகளும் இந்த எதிரொலிகளிலேயே தங்கியுள்ளமை யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய யதார்த்தம். நல்லது நடந்தால் ஊரைப் வியந்து பாராட்டுவார்கள். இல்லாவிட்டால் விமர்சித்து பழிப்பார்கள்.
மாணவர் மத்தியில் காணப்படும் பாலியல் முரண்பாடுகள்; சில முஸ்லிம் கிராமங்களை கதிகலங்கச் செய்கின்றன. அவர்களின் எல்லை மீறல்கள் அங்குள்ள எல்லோரையும் அதிர்ச்சியூட்டுகின்றன. 'கலாச்சார மாற்றங்களுக்கு சமூகம் தலைசாய்க்கும்;' என்ற சமூகக் கோட்பாட்டை, மிகவும்; அண்மைக் காலத்தில் நிரூபித்தவர்கள் சமூகத்தின் முக்கிய குழுவான இந்த மாணவர்களும் அவர்களது கைத்தொலைபேசிகளுமே (Mobile Phone). இந்த 'கைத்தொலைபேசி' கலாச்சாரம் - மாணவர் மத்தியில் - பரவாத முஸ்லிம் கிராமங்கள் அரிதென்றே சொல்லவேண்டும். போதாக்குறைக்கி அவற்றில் நாற்பதுக்கு மேற்பட்ட பாலியல் இணையதளங்கள் (Internet Sex Websites) வேறு! இனி சொல்லவும் வேண்டுமா?
வியாபாரத்திற்கு சந்தை எப்படியோ, அப்படியே பாலியல் முரண்பாடுகளுக்கு பாடசாலைகள் என்றாயிற்று. இரைச்சல் இல்லாமல் சந்தையுமில்லை, சமய - கலாச்சார வீழ்ச்சி இல்லாமல் பாலியல் முரண்பாடுகளுமில்லை. நல்ல விழுமியங்களை விழுங்கிவிட்டோம் என்பதுதான் உண்மை. இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நீங்களும்தான் - நானும்தான். நாம் சமூகத்தின் அங்கங்கள் அல்லவா? இந்தப் பொறுப்புக் கூறலில் ஆசிரியர் குழுக்களும், பெற்ரோர் குழுக்களும், மார்க்க அறிஞர் குழுக்களும், பள்ளிவாசல் நிருவாக குழுக்களும் முன்னிலை வகிக்கின்றன. ஒவ்வொரு குழுவினரும் தத்தமது சமூகக் கட்டமைப்பின் பாத்திரங்களைப் புரிந்துகொள்ளவும், அதன்படி செயற்படவும் சமூக உளவியல்; (Social Psychology) கோட்பாடுகள் கைகொடுக்கின்றன.
சமூக உளவியல் என்பது தனிமனிதனின் அகச்சூழல், புறச்சூழல் மாற்றங்களின் போது அவன் வெளிப்படுத்தும் நடத்தைக் கோலங்கள் தொடர்பாக ஆராயும் கல்வியாகும். இது எந்த சமூகத்திற்கும் பொருந்தும்.நேரான - எதிரான சூழல் மாற்றங்கள் எல்லா சமூகங்களுக்கும் பொதுவானதாகும். இதனாலேயே சமூக முரண்பாடுகள் அவற்றின் நடத்தைகளில் வெளிப்படுகின்றன.
இந்த நடத்தைக் கோலங்கள், ஒரு தனிமனிதன் இன்னொரு மனிதனைச் சந்திக்கும் போதும், அதே தனிமனிதன் பல மனிதர்களைச் சந்திக்கும் போதும், அந்த தனிமனிதன் பல மனிதர்களைக் கொண்ட குழுவை சந்திக்கும் போதும். அதே குழு இன்னும் பல குழுக்களை சந்திக்கும் போதும் ஏற்பட இடமுண்டு. இவ்வாறான சந்திப்புக்களினால் சமூக இடைவினைகள் (Social Interactions) ஏற்படுகின்றன.
இந்த சமூக இடைவினைகள் என்ற செயற்பாடு தனிமனிதன், குழுக்கள், சமூகம் என்ற மூன்று முக்கிய காரணிகளில் தங்கியுள்ளமை வெளிப்படையாகும். தனிமனிதனின் நடத்தைக் கோலங்கள் (Individual Behaviours) எப்படி குழுக்களின் நடத்தைக் கோலங்களில் (Group Behaviours) தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவோ, அவ்வாறே குழுக்களின் நடத்தைக் கோலங்கள் மொத்த சமூகத்தின் நடத்தைக் கோலங்களில் (Social Behaviours); தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தனை வலிமையானவை தனிமனிதனின்; நடத்தைக் கோலங்கள்.
தனிமனிதனின் நடத்தைக் கோலங்களில் 40 வீதம் அவனது பரம்பரை அலகுகளிலும், 60 வீதம் அவன் வாழ்கின்ற சூழலிலும் தங்கியுள்ளதாக சமூக உளவியலாளர்கள் கணித்துள்ளனர். இக்கணிப்பீடு அவனது அகச் சூழலில் இருந்தும்;, புறச் சூழலில் இருந்தும் ஏற்படும் நடத்தைக் கோலங்களின் மாறுதல்கள் தொடர்பாக ஆராய்கின்றது. உளவியலாளர்கள் சமூக உளவியல் தொடர்பாக பல்வேறு வரைவிலக்கணங்கள் கூறியுள்ளபோதிலும், இவ்விடத்தில் SPORRT என்ற உளவியலாளரின் வரைவிலக்கணம் குறிப்பிடப்படல் மிகவும் பொருத்தமானது.
';சமூகத்தில் காணப்படும் மற்றவர்களின் ஓழுக்கத்தினாலும், உளநிலைகளினாலும் எவ்வாறு ஒரு தனிமனிதனின் ஒழுக்கமும், உளநிலையும் பாதிக்கப்படுகின்றது என்பதை ஆராய்வதே சமூக உளவியல்'. இதனடிப்படையில் தனி மாணவனும்,அவன் சார்ந்த மாணவர் குழுக்களும் ஆராயப்படல் வேண்டும்.
சூழல் மாற்றங்களினால் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சமூக இடைவினைகள், நேரான அல்லது எதிரான சமூக மனப்பாங்குகளை (Social Attitudes) அவர்கள்; மத்தியில் ஏற்படுத்துகின்றன. இதனாலயே இவர்கள் இலகுவில் நேரான அல்லது எதிரான சமூகமயமாக்கலுக்கு (Socialization) உட்படுகிறார்கள். அதாவது தமது சுற்றாடலின் சமூக சூழலுக்கேற்ப இசைவாக்கம் பெறுகிறார்கள். எதிரான மனப்பாங்குகள் மூலமாக பெற்றுக்கொண்ட இந்த எதிரான சமூகமயமாக்கல் (Negative Socialization) இவர்களை ஆட்டிப்படைக்கின்றன. இதன் காரணமாகவே இவர்கள் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத - எதிர்பார்க்கப்படாத பல்வேறு முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றனர். குறிப்பாக 'பாலியல் முரண்பாடுகளை' பறைசாற்றுகின்றனர்.
ஒரு நாட்டின் அதியுயர் சபையாக பாராளுமன்றம் கருதப்படுவது போலவே முஸ்லிம் கிராமங்களில் 'உலமா சபை', 'அனைத்து பள்ளிவாசல் நிருவாக சபைகளின் சம்மேளனம்', 'தஹ்வா பணிமையங்கள்' போன்ற அமைப்புக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனாலேயே இந்த அமைப்புக்கள், எந்தவிதமான சமூகப் பிரச்சினைகள் ஏற்பட்டபோதிலும் அவற்றுக்கான தீர்வுகளைக் காணுமாறு சமூகத்தால் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இந்த அழுத்தங்கள் அமைப்புக்களை பல்வேறு அவசிய தீர்மானங்களுக்கு இட்டுச்செல்லுகின்றன. இந்தத் தீர்மானங்கள் ஏவல்கள் - விலக்கல்கள் தொடர்பானவை
போதைவஸ்துப் பாவனையை முறியடித்தல், இணையதள வசதிகள்கொண்ட கணணி நிறுவனங்களை (Internet cafe) கண்காணித்தல், பாடசாலைகளை ஆண் - பெண் என்று தனித்தனியாக பிரித்தல் போன்ற முடிவுகளை அமைப்பினர் முன்வைக்கின்றனர். எனினும் முந்திய இரண்டு தீர்மானங்களுக்கு அறவே ஏற்படாத வாதப் - பிரதிவாதங்கள், பாடசாலை விடயத்தில் ஏற்பட்டுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது. 'மறுதலிப்பு' மேலோங்கியுள்ள இந்த நேரத்தில் மாணவர்கள் தொடர்பான சில உளவியல் உண்மைகளை ஆராய்வது பொருத்தமானதே.
வளர்ச்சி, முதிர்ச்சி ஆகிய உடலியல் செயற்பாடுகளை மையமாகக்கொண்டு, வயதின் அடிப்படையில் குழந்தைப் பருவம் (0-5), பிள்ளைப் பருவம் (5-12), முன்கட்டிளமைப் பருவம் (12-15), கட்டிளமைப் பருவம் (15-20) என்ற நான்கு பிரிவுகளாக மாணவர்கள் வகுக்கப்பட்டுள்ளனர். இதில் பிரச்சினைக்குரிய பருவங்களாக முன்கட்டிளமை - கட்டிளமைப் பருவங்கள் இனங்காணப்பட்டுள்ளன. பாலியல் சுரப்பிகள் தொழிற்பட ஆரம்பிக்கும் இந்தக் காலகட்டத்தில் மாணவர் மத்தியில் எதிர்பால் கவர்ச்சிகளும், ஆண் - பெண் குழுவாக இயங்கும் இயல்புகளும் மேலோங்கும். இவை இயற்கையான இயல்புகள். இதனாலேயே விளையாட்டுப் போட்டிகள் போன்ற அம்சங்கள் கல்வி - கற்றலில் உள்ளடக்கப்பட்டு, 'இல்லங்கள்' என்ற போர்வையில் குழு நடத்தைகளை வெளிப்படுத்தி, வெற்றி - தோல்விகளை சமனாகக்காணும் மனோபாவங்களை அடைகின்றனர்.
இந்த மனோபாவங்கள் மேலோங்க - மேலோங்க அவர்களின் ஆளுமை (Internet cafe) அதிகரிக்கின்றது. இந்த ஆளுமைகள் மாணவர்களின் ஊக்கி (Drive), செயலூக்கம் (Motivation), இலக்கை (Target) அடைதல் போன்ற உடலியல் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறுகின்றது. பசியென்ற ஊக்கி செயற்படத் தொடங்கும்போது, அதைத் தணிப்பதற்கான செயலூக்க முயற்சிகள் அதாவது சமைத்தல் - கடைகளில் உணவை வாங்குதல், அல்லது யாரிடமாவது இரத்தல் போன்ற நேரான செயலூக்கங்கள் இடம்பெறும். இதே நேரம் உணவைத் திருடுதல் என்ற முரணான வழியிலும் செயலூக்கம் இடம்பெறலாம். இது அவரவர் சந்தர்ப்ப, சூழுல், அப்போதைய மனோபாவம் என்பவற்றில் தங்கியுள்ளது.
இதைப் போன்றதே மாணவர்களின் பாலியல் ஊக்கிகளும், அதற்கான செயலூக்கங்களும் இடம்பெறுகின்றன. செயலூக்கங்களும், இலக்கை அடைதலும் எதிர்மறையாக அமைந்தால் அது சம்பந்தப்பட்டவர்களின் எதிரான மனோபாவங்களையும், அவர்களது சமய - கலாச்சார விழுமிய வீழ்ச்சிகளையுமே எடுத்தியம்பும். இந்த தனிநபர் விழுமிய வீழ்சிகளுக்கு அவர்சார்ந்த குழு, பாடசாலைச் சூழல், பாடசாலைக்கு வெளியே காணப்படும் சூழல், குடும்ப சூழல் போன்ற எல்லா அம்சங்களுமே காரணமாகும். சில அண்மைக்கால மாணவ - மாணவிகள் பாலியல் முரண்பாடுகளில் முன்னிலை வகிக்கின்றனர். இதுவே சில முஸ்லிம் கிராமங்களிலுள்ள முக்கிய சமூகப் பிரச்சினை!
இந்த முரணாண மாணவர்களை உருவாக்கியது யார் என்று ஆராய்ந்தால் அவர்கள்; சார்ந்த சூழல் என்று பளீரெனப் பதில்கிடைக்கும். அவர்களுக்கு விலைகூடிய - பாலியல் இணையதளங்களை பார்லையிடக்கூடிய - அதிநவீன கையடக்க தொலைபேசிகளை விபரீதம் புரியாமல் பரிசளித்த பெற்ரோர், பாடசாலைக்கு வெளியேயுள்ள வளர்ந்த நண்பர்கள், கடற்கரை போன்ற ஒதுக்குப்புறங்களில் அந்த தொலைபேசியுடன் நண்பர்களோடு பொழுது போக்கும் அவர்களது சுதந்திரம்;, இதுபோன்ற நவீன தொலைபேசிகளை கையோடு கொண்டுதிரிதல் - பாவித்தல் நாகரீகம் என்று கணிக்கும் அயலவர்களும், ஏனைய இளைஞர்களும், மற்றவர்களும் இந்த நாறிப்போன சமூக அமைப்பின் அங்கங்களல்லவா? இவர்களது உருவாக்கத்திற்கு பதில் கூறவேண்டியது சமூகமே! கையடக்க தொலைபேசிகளுக்கு 'போலிக் கௌரவம்' கொடுத்த சமூக முரண்பாடு எங்கே ஆரம்பித்தது? பாடசாலையிலா..... இல்லையே? வெளியிலேயே ஆரம்பித்தது. வளர்ந்தவர்கள் மாணவர்களுக்கு கைமாறினார்கள் அவ்வளவுதான்..... வந்தது வினை! இந்த விடயத்தில் பாடசாலைகள் வெறும் தளங்கள் மாத்திரமே!
(O/L) & (A/L) வகுப்புக்களை நடாத்துகின்ற கல்லூரிகள் ஆண்கள் - பெண்கள் பாடசாலைகளாகப் பிரிக்கப்பட்டு - இந்த சூழலில் பயின்ற - இதே மாணவிகள் வைத்திய பீடங்களுக்கும், பொறியியல்பீடங்களுக்கும். மற்றும் ஏனைய பீடங்களுக்கும் தெரிவாகிச் செல்லும்போது ஆண்கள் - பெண்கள் என்று பிரிக்கப்பட்ட பல்கலைக் கழகங்களுக்கு எங்கே போவது? இதுமாத்திரமல்ல, பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்படாத இதே மாணவிகள் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும், கல்விக் கல்லூரிகளுக்கும், வேறுபல தனிப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கும் தெரிவாகும்போது ஆண்கள் - பெண்கள் என்ற பேச்சிக்கே இடமில்லையே! இஸ்லாமிய நாடா இது?
பாலியல் சுரப்பிகள் தீவிரமாகத் தொழிற்பட ஆரம்பிக்கும் இந்த (O/L) & (A/L) மாணவ - மாணவிகள், சமய விழுமியங்கள் கலந்த - கலாக்சார பின்னணியில் கண்காணிக்கப்படும்போது, அவர்களிடம் மேலான சமூக மனப்பாங்குகளும், சமூக மயமாக்கலும் ஏற்படும். இந்த இயல்புகள் அவர்கள் எங்கு சென்றாலும் பின்தொடரும். இப்படியான சமூக மனப்பாங்குகளும் - மயமாக்கலும் ஏற்படாத மாணவ - மாணவிகள் பல்கலைக் கழகங்களிலும், ஏனைய கல்வி நிறுவனங்களிலும் 'ஒதுங்கூக்கல்' இயல்புகளை வெளிப்படுத்துவார்கள். இது அவர்களின் கல்வியையும், ஆளுமையையும் பாதிக்கும். குழு வேலைகளை (Group works) புறக்கணிப்பார்கள்;. இவையெல்லாம் உளவியல் விவகாரங்கள்!
இந்த ஆணிவேரை ஆராயாமல் பக்கக் கிளைகளைப் பழிப்பதிலும் - தறிப்பதிலும் பலனில்லை. ஆண் - பெண் என்று பாடசாலைகளைப் பிரிப்பதால்; பெரிதாக ஒன்றையும் சாதிக்கப்போவதுமில்லை. பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசிகளைத் தடைசெய்தல், 'ளுஹர்' தொழுகை நடாத்தப்படல், சமயவுணர்வுகள் மேலோங்கக் கூடியதாக கலாச்சார நிகழ்வுகள் இடம்பெறல், ஆசிரியர்களும் முன்மாதிரியாகத் திகழ்ந்து மாணவர்களைக் கடுமையாகக் கண்காணித்தல், மீறுபவர்களைத் தண்டித்தல் போன்ற இன்னோரன்ன கைங்கரியங்கள் அமுல்படுத்தப்பட்டால் ஆண்கள் - பெண்கள் என்று பாடசாலைகளைப் பிரிக்க அவசியமேயில்லை!
ஆண் - பெண் என்று பிரித்தாலும் - பிரிக்காவிட்டாலும் எங்கெல்லாம் சமய - கலாச்சார விழுமியங்கள் இல்லையோ அங்;கெல்லாம் நாறும். இதுவே யதார்த்தம்! சில வேளைகளில் யதார்த்தமும் கசக்கும்! புரிந்துகொண்டால் பிரச்சினைகள் தீரும்! இந்த இடத்தில் பாடசாலைகளுக்க
|
|
comments (0)
|
(கள்ளக்
காதலர் தினம் இலங்கை. காத்தகுடி. ஏ.எஸ்.எம். மக்பூல்
இன்றைய உலகம் பல முன்னேற்றங்களையும் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியினையும் அடைந்துள்ளது. குறிப்பாக அச்சு, இலத்திரனிய ஊடகங்களில் அபிவிருத்தி ஏராளமான மாற்றங்களையும் தாக்கங்ளையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த ஊடகங்களின் விரிவாக்கத்தால் நன்மையையும், பயனையும் அடையும் நாம் சீரழிவுகளையும் மற்றும் மனிதநேயம், மனிதாபிமானத்தையும் தொலைத்து நாகரீகம் என்ற வார்த்தையில் அநாகரிகமாய் அடைய விட்டு வைத்து இருப்பதை நடைமுறை வாழ்க்கையில் நாம் காண்கிறோம்.
தவறான வாழ்க்கை முறையிலிருந்து கௌரமான மதிக்கத்தக்க ஒரு சூழலை உருவாக்க வேண்டிய கடப்பாட்டுடனும் கடமையுடனும் இருக்கிறோம்.
இன்றைய காலக்கட்டத்தில் சீர்படுத்த வேண்டிய சீரமைக்க வேண்டிய முக்கியமான ஒன்று நாம் இளைய சமுதாயம். ஆம்.. இன்றைய இளையவயதினர் குறிப்பாக மாணாக்கர்கள் அறிவுபூர்வமாய் ஆக்கப்பூர்வமாய் செயல்படாமல் உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் தீய விளம்பரங்களுக்கும் அடிமைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.
இதற்கு உதாரணமாய் ஏராளமான விஷயங்களை நாம் காணலாம். அதில் பிப்ரவரி 14 காதலர்களின் களியாட்ட கொண்டாட தினமான காதலர்கள் தினத்தினை (Valentine’s Day) கூறலாம்.
எந்த காதலரும் மறக்காத மற்றும் மறக்க முடியாத காத்து காத்து தவம் கிடக்கும் தினமாக அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நமக்கு ஜனவரி என்றால் புதுவருடம் பிறப்பது சர்வ சாதாரணம். ஆனால் காதலர்களோ இன்னும் 45 நாள்கள் தான்.. காதலர்கள் தினம் நெருங்கி விட்டது. இனி களத்தில் இறங்க வேண்டியது தான் என்று கொண்டாடத்திற்கான ஆயத்தங்களிலும் கற்பனைகளிலும் திட்டம் தீட்டுவதிலும் மூழ்கி விடுவார்கள்.
இந்த நேரமாக பார்த்து கையிலும் காசு இல்லை பரிசுப்பொருட்கள் புதிய ஆடைகள் பார்ட்டிக்கென்றும் இன்னும் எவ்வளவு தேவைகள் இருக்கிறது என்று அங்கலாய்த்து கொள்வார்கள்.